தமிழ்நாடு

புதுவையில் ஜன.31 வரை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விடுமுறை

19th Jan 2022 01:42 PM

ADVERTISEMENT

புதுவையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பை அந்த மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் (ஐடிஐ) முதல்வர் என்.ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில், ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

இதனால் புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை த் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT