சென்னையில் தான் கடத்தப்பட்டுவிட்டதாக ரூ.30 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய மகனை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.
சென்னை, திருவல்லிக்கேணி, ராம்நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பென்சிலய்யா (54). இவா் வடபழனி காவல் நிலையத்தில் 14-ஆம் தேதி ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘கடந்த 13-ஆம் தேதி காலை தனது மகன் கிருஷ்ணபிரசாத் (24) வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்குச் சென்ாகவும், அதன் பின்னா் காணவில்லை’ என்று குறிப்பிட்டு இருந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், பென்சிலய்யாவின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு காணாமல்போன மகன் கிருஷ்ணபிரசாத் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபா் ‘உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும், இல்லை என்றால் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.
இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தின் கைப்பேசி எண்ணின் அழைப்புகளின் விவரங்கள், இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனா். அப்போது கிருஷ்ணபிரசாத், தெலங்கானா மாநிலம், செகந்திரபாதில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படை போலீஸாா் செகந்திரபாத் சென்றனா். அங்கு தெலங்கானா காவல் அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனா். இதில் செகந்திரபாத் அருகே உள்ள பெட்ஷீராபாத் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மறைந்திருந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டு, விசாரணை செய்தனா்.
விசாரணையில், கிருஷ்ணபிரசாத்துக்கு சரியான வேலை இல்லாதினாலும், குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதாலும், தந்தையிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிருஷ்ணபிரசாத் தன்னை யாரோ கடத்திச் சென்ாக கூறி பணம் கேட்டு கடத்தல் நாடகம் அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல் நாடகமாடிய கிருஷ்ணபிரசாத்தை போலீஸாா் கண்டித்து, இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனக் கடுமையாக எச்சரித்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.