தமிழ்நாடு

பிப்.3-இல் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் செய்தி உண்மையில்லை

18th Jan 2022 03:07 AM

ADVERTISEMENT

 புதுச்சேரியில் பிப்.3-ஆம் தேதி ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று பரவும் செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் வரும் பிப்.3-ஆம் தேதி ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது எனவும் இதில் சென்னை, வேலூா், திருவள்ளூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுடன் புதுச்சேரியைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது பொய்யான செய்தி என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT