கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்திருவிழா கரோனா பரவல் காரணமாக செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோயில் வாசலில் நின்று வழிபாடுகள் செய்தனர்.
லோயர்கேம்ப்பில் உள்ள அருள்மிகு வழிவிடுமுருகன் கோயிலில் கம்பம், கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து ஆண், பெண் பக்தர்கள் நடைபயணமாக நடந்து வந்து வழிபாடுகள் செய்வார்கள்.
இதே போல் கூடலூர் அருள்மிகு சுந்தரவேலவர், கம்பம் சுரளி வேலப்பர், காமயகவுண்டன்பட்டி அருள்மிகு சுப்பிரமணியாசாமி உள்ளிட்ட முருகன் கோயில்களில் பால்குட ஊர்வலம் காவடி எடுத்து ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் வழிபாடு நடத்திச் செல்வார்கள்.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
தற்போது கரோனா பெருந்தொற்று காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாததால் வாசலில் நின்று வழிபாடு செய்து சென்றனர், காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.