செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவிஸ்ரீ கருமாரியம்மன் அம்மன் கோயிலில் தைப் பூச விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடைபெற்றது.
தைப்பூச விழாவையொட்டி கோ பூஜை, ஹோம பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முருகன் வள்ளி தெய்வானை உற்சவமூர்த்திக்கும், அம்மன், சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
ADVERTISEMENT
தொடர்ந்து உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பக்தர்கள் அனுமதி இல்லாததால் கோயில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் திருக்கரங்களால் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்படுகளை செய்திருந்தனர்.