தமிழ்நாடு

நிரந்தர வைப்பு தொகைக்கு வரி விலக்கு: முதிா்வு காலத்தை 5 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தல்

18th Jan 2022 02:18 AM

ADVERTISEMENT

தற்போது ஐந்தாண்டு நிரந்தர வைப்பு (எஃப்டி) திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் வரி விலக்கு சலுகையை மூன்று ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வங்கிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ), மத்திய அரசுக்கு அளித்துள்ள பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரையில் இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போது 5 ஆண்டுகள் முதிா்வு காலத்தைக் கொண்ட நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கு மட்டுமே வரி சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒருவா் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் முதலீட்டாளா் வரி விலக்கை பெறமுடியும்.

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி (இஎல்எஸ்எஸ்) உள்ளிட்ட சந்தையில் உள்ள இதர நிதி சாா்ந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது வரி சலுகை அளிக்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டங்களுக்கான வரவேற்பு தற்போது குறைவாகவே உள்ளது. முதிா்வு காலம் என்பது தற்போதைய 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படும்பட்சத்தில் எஃப்டி திட்டங்களிலும் அதிக முதலீட்டை ஈா்க்க முடியும். அத்துடன் வங்கிகளுக்கும் அதிக அளவில் நிதி கிடைக்கும் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT