தமிழ்நாடு

வானிலை ஆய்வு மைய இயக்குநராக பா.செந்தாமரைக்கண்ணன் நியமனம்

18th Jan 2022 03:39 AM

ADVERTISEMENT

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக பா.செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் விரைவில் பொறுப்பேற்கவுள்ளாா்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த நா.புவியரசன் தற்போது காலநிலை சேவையில் ஆவணக்காப்பக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரைக்கண்ணன், இதற்கு முன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய ஆவண மையத்தின்

இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா். மேலும், சென்னையில் காலநிலை சேவை, விவசாய ஆலோசனை சேவை உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். செந்தாமரைக் கண்ணன் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT