புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 1,715 நபர்களுக்கும், காரைக்காலில் 279 பேர், ஏனாமில் 54 பேரும், மாஹேவில் 45 பேர் என மொத்தம் 2,093 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,40,710 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
இதில் தற்போது 10,393 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,893 ஆக உள்ளது.
ADVERTISEMENT
இதனிடையே 256 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,28,424 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 15,03,355 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.