திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதில் பிரபலங்கள் பலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கி. வீரமணி நலமுடன் உள்ளதாகவும் விரைவில் நலம் பெற்று திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கே. பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், 'திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கரோனா தொற்று பாதித்தது என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவர் சிகிச்சைப் பெற்று வரும் கிண்டி கரோனா மருத்துவமனை இயக்குனரிடம் அவர் உடல் நலம் குறித்து விசாரித்தேன்.
அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் மூத்தத் தலைவராக திகழும்கி. வீரமணி விரைவில் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென விழைகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.