தமிழ்நாடு

வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வசதி: சென்னை மாநகராட்சி அசத்தல்

18th Jan 2022 12:39 PM

ADVERTISEMENT

 


சென்னை: கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட முதியவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், இரண்டு தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, வீட்டிற்கேச் சென்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

ADVERTISEMENT

அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது வீட்டிலேயே முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்னை மாநராட்சி அறிவித்துள்ள 1913, 044-2538 4520 அல்லது 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் அழைப்பு விடுத்து, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அல்லது இணை நோயிருப்பவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது சமுதாய நலக் கூடத்தில் நேரில் சென்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அதாவது, கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவு பெற்றவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிபெற்றவர்களாவர். வீட்டிலேயே வந்து முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்வோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவரின் பெயர், வயது, இணைநோய், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ், சரியான முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்த இலவச தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்த சில நிமிடங்களில் எல்லாம் ஏராளமானோர் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டுள்ளனர். சிலர், தங்களுக்கு அழைப்பு இணைக்கப்படவில்லை என்றும் சுட்டுரையில் புகார் அளித்திருந்தனர்.

சிலரோல், இன்று காலையில் முன்பதிவு செய்து இரண்டு மணி நேரத்தில் சுகாதார ஊழியர்கள் நேராக வீட்டுக்கே வந்து எனது தாய்க்கு தடுப்பூசி செலுத்திச் சென்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT