தமிழ்நாடு

பவானியில் காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

18th Jan 2022 12:45 PM

ADVERTISEMENT

 

பவானி: பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள காலிங்கராயன் முழு உருவச் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியதோடு வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளான தை மாதம், 5-ம் தேதி காலிங்கராயன் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் காலிங்கராயன் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதனை முன்னிட்டு, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் காலிங்கராயன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுன்னி முன்னிலை வகித்தார். ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி,  சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில   துணைத் தலைவர் ஆர் ஆறுமுகம், மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில பொதுக் குழு உறுப்பினர் கே.எம்.ஈஸ்வரமூர்த்தி,  விவசாய அணி செயலாளர் எஸ்.எஸ்.முருகேசன் ஆகியோர் முன்னிலையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), பண்ணாரி (பவானிசாகர்), முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, கே.ஆர்.சிவசுப்பிரமணியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும், பல்வேறு பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததோடு, காலிங்கராயன் வாய்க்காலில் மலர்தூவி வழிபாடு நடத்தினர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT