திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக, பணியாற்றி வந்த தமிழக நிதித் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், அரசுப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக, கட்சித் தலைவரிடம் கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு, அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்படுகிறார்."
தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக அயலக அணிச் செயலாளராக எம்.எம். அப்துல்லா நியமிக்கப்படுவதாகவும் திமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.