தமிழ்நாடு

முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்க டிஜிபி உத்தரவு

18th Jan 2022 12:57 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

முழு ஊரடங்கின்போது வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பயணிகள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல ஆட்டோ, டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும் அவ்வாறு கிடைத்த ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. 

ADVERTISEMENT

எனவே, இனிவரும் ஊரடங்கு நாள்களில் இதுபோன்றவை தவிர்க்கப்பட வேண்டும், முழு ஊரடங்கு நாள்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் மக்கள் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க காவல்துறையினர் நடவடிக்கை வேண்டும். 

ஊரடங்கு நாள்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுகள். 

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜனவரி  9, 16 ஆகிய நாட்களில் விதிகளை மீறியதாக ரூ.78,34,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.

ஊரடங்கு விதிகளை மீறியதாக ஜனவரி 9-ல் 19,962 வழக்குகளும் ஜனவரி 16-ல்  14,951 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT