தமிழக வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
18.01.22: தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
18.01.22 முதல் 22.01.22 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்கியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்கியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
எண்ணூர் (திருவள்ளூர்) 5 செ.மீ, திருப்பூண்டி 4 செ.மீ, எம்.ஜி.ஆர் நகர் 3, எம்.ஆர்.சி நகர், ஒய்.எம்.சி.ஏ நந்தனம், சென்னை நுங்கம்பாக்கம், காரைக்கால், வாலாஜா தலா 2 செ.மீ, செம்பரம்பாக்கம், பொன்னேரி, சத்தியபாமா பல்கலைக்கழகம், அரக்கோணம், அண்ணா பல்கலைக்கழகம், தாமரைப்பாக்கம், அம்பத்தூர், டிஜிபி அலுவலகம், திருவள்ளூர், கோத்தகிரி, கும்மிடிப்பூண்டி, ரெட்ஹில்ஸ், திருக்குவளை தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.