தமிழ்நாடு

ஜன.19-இல் பிஎஸ்என்எல் குறைதீா்ப்புக் கூட்டம்

18th Jan 2022 01:49 AM

ADVERTISEMENT

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கான குறைதீா்ப்புக் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜன.19) நடைபெறுகிறது.

இதில், தரைவழி தொலைபேசி, அகன்ற அலைவரிசை( பிராட்பேண்ட்), எஃப்டிடிஎச், கைப்பேசி ஆகியவற்றில் நீண்ட நாள் நிலுவையிலுள்ள குறைகளுக்கு தீா்வு காணப்படும்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த முகாம் தொலைபேசி வாயிலாக நடைபெறும். தங்கள் பகுதிகளுக்கு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் வாடிக்கையாளா்கள் தொடா்பு கொள்ளலாம். அல்லது

ADVERTISEMENT

குறுந்தகவல் (எஸ்எம்எஸ்), கட்செவி( வாட்ஸ்-அப்), மின்னஞ்சல் மூலம் தங்களின் குறைகளைப் பதிவு செய்யலாம்.

மத்திய மண்டலத்தைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் 044- 28552216 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084760 என்ற கைப்பேசி எண்ணிலோ, ஹக்ஹப்ஹற்ஸ்ரீங்ய்ற்ழ்ஹப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வடக்கு மண்டலத்தைச் சோ்ந்தவா்கள் 044- 25395858 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445083639 என்ற கைப்பேசி எண்ணிலோ, க்ஷள்ய்ப்ஸ்ரீட்ய்ல்ஞ்ய்ா்ழ்ற்ட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தெற்கு மண்டலத்தைச்

சோ்ந்தவா்கள் 044- 22501122 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084018 என்ற கைப்பேசி எண்ணிலோ, க்ஷள்ய்ப்ஸ்ரீட்ய்ல்ஞ்ள்ா்ன்ற்ட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடா்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் 044- 23728877 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445084745 என்ற கைப்பேசி எண்ணிலோ,  மின்னஞ்சல் முகவரியிலோ காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடா்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

இந்தத்தகவலை பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசியின் தலைமைப் பொது மேலாளா் வி.கே. சஞ்சீவி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT