தமிழ்நாடு

தம்மம்பட்டி அருகே விஷப்பூச்சி கடித்து சிறுவன் பலி

18th Jan 2022 11:24 AM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே விஷப்பூச்சி கடித்ததில், சிறுவன் உயிரிழந்தான்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, 12 ஆவது வார்டு, விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் மருதை. இவரது மகன் சந்துரு (11). பில்லங்குளம் பகுதியில் மருதையின் தோட்டம் உள்ளது. நேற்று மாலை, தோட்டத்தில் உள்ள, சோளத்தட்டு போர் அருகே சென்ற சிறுவன் சந்துருவை, சோளத்தட்டு போருக்குள் இருந்து, பெரிய அளவிலான பூரான் போன்ற ஒரு வகை விஷப்பூச்சி (பாம்பு அல்ல) சிறுவனை கடித்துள்ளது. 

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், மருதை ஓடிச் சென்று, அந்த விஷப்பூச்சியை அடித்துக் கொன்றார். அந்த விஷப்பூச்சி கடித்ததில், சந்துருவுக்கு உடல் முழுவதும் தோலில் தடிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, உடனடியாக, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில், சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் சந்துரு உயிரிழந்தான். விஷப்பூச்சி கடித்து, சிறுவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த குறிப்பிட்ட வகை விஷப்பூச்சி கடித்தால், உடனடியாக மனிதனின் இதயத்தைத் தாக்கும் என்று கிராம பெரியவர்கள் கூறுகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT