தமிழ்நாடு

குடியரசு விழாவில் தமிழக ஊர்தி நிராகரிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

DIN


குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் நடைபெறும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களைக் கொண்ட ஊர்திகள் இடம்பெறும். வரும் குடியரசு நாள் விழா அணிவகுப்பிலிருந்து வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT