தமிழ்நாடு

தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு

17th Jan 2022 09:00 AM

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 7 பேர் கொண்டு தமிழக அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழு முயற்சி மேற்கொண்டது. எனினும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் வழங்காதது பெரும்

மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த சந்திப்பில் நீட் விலக்கு தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவிடம் வலியுறுத்த உள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT