தமிழ்நாடு

‘சமூகநீதி, அதிகாரமளித்தலில் முதன்மையான தலைவர் எம்.ஜி.ஆர்.’: பிரதமர் மோடி

17th Jan 2022 09:19 AM

ADVERTISEMENT

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தமிழல் ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 105- வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசுத் தரப்பிலும் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:

“ பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.

ADVERTISEMENT

அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது! ”

Tags : modi MGR
ADVERTISEMENT
ADVERTISEMENT