தமிழ்நாடு

வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு திங்கள்கிழமை நடைபெற்று வருகின்றது.

ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு முன்னிலையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில், 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட உள்ளன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடுபடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்துவருகின்றனர். அதில்,காளைகள் முட்டியதில் சில மாடுபடி வீரர்களுக்கம் பார்வையாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT