தமிழ்நாடு

ஜன.18, 26-இல் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

17th Jan 2022 06:04 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை ஜன.18, 26 ஆகிய தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: ஜன.18-ஆம் தேதி, வடலூா் ராமலிங்கா் நினைவு நாள் மற்றும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல் 11

உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பாா்கள்) விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT