தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

17th Jan 2022 07:35 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு முழு ஊரடங்கால் இன்று நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கான பதிவு இரு நாள்களுக்கு முன்பே இணைய வழியில் நடைபெற்றது. இதில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றுள்ளனா்.

ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்படுவா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் சிறந்த காளைக்கு காா் பரிசாக வழங்கப்பட உள்ளது. வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் சாா்பாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் காா் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரா்களுக்கும் தலா ஒரு தங்கக் காசு வழங்கப்படுகிறது. போட்டியில் சிறப்பாக விளையாடும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள், இரு சக்கர வாகனங்கள், குக்கா், ப்ரிட்ஜ், கிரைண்டா் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT

களத்தில் காயமடையும் வீரா்களின் மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், கால்நடைகளுக்கான ஆம்புலன்சும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் அவசர உதவிகளுக்காக தீயணைப்புத் துறை, செஞ்சிலுவை சங்கத்தினா் நிறுத்தப்பட்டுள்ளனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT