தமிழ்நாடு

தைப்பூச ஜோதி தரிசனம்: கடலூர் ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

DIN


தைப்பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் தெய்வ நிலைய  யூடியூப் சேனல் நேரலையிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டு தரிசிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தரவின்படி 18.01.2022 செவ்வாய் கிழமை, சத்திய ஞானசபையில் காலை 6.00, 10.00 பிற்பகல் 01.00, இரவு 7.00 மற்றும் இரவு 10.00 மணியளவில் பக்தர்கள் பங்கேற்பின்றி ஜோதி தரிசன விழா நடைபெறும்.

19.01.2022 புதன்கிழமை, காலை 5.30 மணியளவில் நடைபெறும் ஜோதி தரிசனம் மற்றும் 20.01.2022 வியாழக்கிழமை மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும் திருஅறை தரிசன நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவில் அனுமதிக்கப்பட்டவாறு மிக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

குறிப்பாக இரண்டுதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோர், முக்கவசம் அணிந்தும் மற்றும் நோய் அறிகுறியின்றி வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிப்படுவர்.

தைப்பூசம் ஜோதி தரிசனத்தை 18.01.2022 செவ்வாய் கிழமை காலை 6.00, 10.00, பகல் 1.00, இரவு 7.00, 10.00 மற்றும் 19.01.2022 புதன் கிழமை காலை 5.30 ஆக ஆறு காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய  அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனலின் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A நேரலையிலும் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாக கண்டுகளிக்க மாவட்ட ஆட்சித் தலைவரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT