தமிழ்நாடு

சென்னையில் 54 ஆயிரம் கரோனா நோயாளிகள்

16th Jan 2022 12:13 PM

ADVERTISEMENT

 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 54,685 பேர் கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,978 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க.. தாமதமாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: எப்போது வெளியாகும்?

ADVERTISEMENT

தமிழகம் முழுவதுமே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,989 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரு நாளில் மட்டும் 8,978 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,34,793-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,71,387-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,721 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பிற்கு 54,685 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில், காஞ்சிபுரம், மதுரை  ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT