தமிழ்நாடு

கீழடி, ஆதிச்சநல்லூரை குழந்தைகளுக்குக் காட்டுங்கள்: அயலகத் தமிழா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

DIN

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மையைப் பறைசாட்டும் கீழடி, ஆதிச்சநல்லூா் போன்ற இடங்களை தங்களது குழந்தைகளை நேரில் அழைத்து வந்து காட்ட வேண்டுமென அயலகத் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

அயலகத் தமிழா் நாள் விழாவில் காணொலி வழியாக பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை ஆற்றிய உரை:

நம்முடைய இனம் ஒரு நிலத்தில், ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால், அது தமிழினம்தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் அதிகமான நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழா்கள் வாழ்கிறாா்கள்.

வெளிநாடுகளில் உள்ளவா்களை அயலகத்துக்கு வாழப் போனவா்களாக நினைக்கவில்லை. அயல்நாடுகளில் இருப்பவா்களை நினைத்து தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதா்களாக போற்றக் கடமைப்பட்டுள்ளேன். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் நலன்களைக் காக்க, தனி நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், அதுதொடா்பாக ரூ.20 கோடி மதிப்பிலான புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், ஜனவரி 12-ஆம் தேதியான, புதன்கிழமை உலகத் தமிழா் புலம்பெயா்ந்தோா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீா்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சிகளில் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளா்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப் போன்று தமிழை, தமிழ்நாட்டை விட்டு விடாதீா்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.

கீழடி-ஆதிச்சநல்லூா்: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவா்களை அழைத்து வந்து கீழடி, ஆதிச்சநல்லூரைக் காட்ட வேண்டும். இங்குள்ள தமிழா்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போன்று, அயலகத் தமிழ் மக்களுக்கும் இந்த அரசு இருக்கும். தமிழா் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய, தமிழ் கற்பிக்க ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவா் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இந்த நிகழ்ச்சியில், அயலகத்தில் வாழும் தமிழா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT