தமிழ்நாடு

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு!

13th Jan 2022 04:52 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர்(மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்றை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான  நேரடி நியமனத்திற்கு (கொள்குறி வகை) எழுத்துத் தேர்வுக்கு அறிக்கை எண் 17/2021, நாள் 20.10.2021-ன் வாயிலாக   அறிவிக்கை செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது 22.02.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ள அத்தேர்வு எழுதுவதற்கான அனுமதிக்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | பொதுப்பணித்துறையில் வேலை: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் நுழைவு சீட்டு
தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT