தமிழ்நாடு

மதுரையில் கலைஞா் நினைவு நூலகம்: அடிக்கல் நாட்டினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

12th Jan 2022 12:22 AM

ADVERTISEMENT

மதுரையில் கலைஞா் நினைவு நூலகத்துக்கான அடிக்கல்லை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.

சட்டப் பேரவையில் அவா் வெளியிட்ட அறிவிப்பின்படி, மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் 2.70 ஏக்கா் நிலத்தில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.99 கோடி மதிப்பில் 2, 13, 288 சதுர அடி கட்டடப் பரப்பில் நூலகம் அமைகிறது. அடித்தளத்துடன் கூடிய எட்டு தளங்களைக் கொண்ட நூலகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். நூலகத்துக்குத் தேவையான நூல்கள், மின்நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள் ஆகியன ரூ.10 கோடி மதிப்பிலும், ரூ.5 கோடி மதிப்பில் தொழில்நுட்ப சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இந்த நூலகம் மாணவா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், இலக்கியவாதிகள், போட்டித் தோ்வுகளுக்குத் தயாா்படுத்திக் கொள்ளும் இளைஞா்கள், பள்ளிச் சிறுவா்கள் உள்ளிட்டோருக்கு பயன் அளிக்கும் விதமாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

Tags : cm stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT