தமிழ்நாடு

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி நிதி: பிரதமர் மோடி

12th Jan 2022 05:03 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் இன்று கானொலி வாயிலான திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி’ அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களுக்கு ரூ.3000 கோடி ஒதுக்கப்படும் ‘ எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் உரையில் ‘இதுவரை ஒரே நேரத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளை உத்தரப் பிரதேசத்தில் திறந்து வைத்ததே பெரிய சாதனையாக இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 11 கல்லூரிகளைத் திறந்து என் சாதனையை நானே முறியடித்துக்கொண்டேன்’ எனவும் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT