தமிழ்நாடு

மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்

12th Jan 2022 01:01 PM

ADVERTISEMENT

மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 18 நாள்களுக்குப் பிறகு கடந்த 5 ஆம் தேதி கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

அதன்பின்னா், ஜனவரி 6 ஆம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூா் மாவட்டக் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பரம்வீா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, கே.டி. ராஜேந்திர பாலாஜியை ஜனவரி 20 ஆம் தேதி வரை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இந்நிலையில், கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவருடைய பாஸ்போர்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT