தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை:  அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

12th Jan 2022 11:33 AM

ADVERTISEMENT


பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பர தேடிய கட்சி அதிமுகதான். திமுகவுக்கு அந்த அவசியம் இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 

அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியில்தான் நிவாரண பொருள்கள் மற்றும் பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடப்பட்டது. திமுக ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும் திமுக கொண்டுவந்த திட்டங்களில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியபோது ஓபிஎஸ் அமைதியாகத்தான் இருந்தார்; பிள்ளைக்கு பேர் வைத்தீர்களே சோறு வைத்தீர்களா? என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமான பொருள்கள் வழங்கப்படவில்லை என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புகார் கூறிய நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT