தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை: மா.சுப்பிரமணியன்

12th Jan 2022 10:42 AM

ADVERTISEMENT

 

இந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நிறுத்திவைக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

படிக்கநாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4,868-ஆக அதிகரிப்பு

ADVERTISEMENT

சென்னையில் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக நானும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்று கூறினார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT