தமிழ்நாடு

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

12th Jan 2022 10:16 AM

ADVERTISEMENT


அனைவருக்கும் இனிய பொங்கல் - இன்பத் தமிழ் புத்தாண்டு திருநால் நல் வாழ்த்துகள் என்று கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், பூமிப் பந்தில் தமிழர்கள் எந்நாட்டில் இருந்தாலும் அங்கெல்லாம் போற்றப்படும் பொங்கல் நன்னாளில் இனிய வாழ்த்துகளை உடன்பிறப்புகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகத்  தமிழர்களுக்கும் தெரிவித்து உள்ளத்தில் உவகை கொள்கின்றேன்.

பொங்கல் திருநாள் என்றாலே இனிப்பு-இனிமை. அதிலும் இந்த ஆண்டு, நம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு வருகின்ற முதல் பொங்கல் திருநாள் என்பதால் இரட்டிப்பு இனிப்பும்  இனிமையும் இதயத்தை நிரப்புகிறது.

படிக்கதைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ADVERTISEMENT

ஒரு கையில் கரும்பும், இன்னொரு கையில் பொங்கல் பரிசுப் பையையும் எடுத்துச் செல்லும் பொதுமக்கள் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி. அது அவர்களின் இதயத்திலிருந்து  பொங்கி வழிந்தோடும் மகிழ்ச்சியல்லவா! வீண் - காழ்ப்புணர்ச்சி விமர்சனங்களை விறகாக்கி அடுப்பெரித்து, இன்பப் பொங்கல் பொங்குவது போல, தமிழ்நாட்டு மக்களிடம் மகிழ்ச்சி பொங்கிடக் கண்டேன். 

ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாகவும், நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும்  செயல்படுத்துவதில் நமது அரசு மிகவும் உறுதியுடன் இருக்கிறது.

மக்கள் நலனை மனதில் முழுமையாகக் கொண்டு, கட்டுப்பாடு காத்து, கடமை உணர்வுடன்,  கண்ணியம் மிளிர்ந்திடச் செயல்படும் உடன்பிறப்புகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் நிறைந்து பொங்கும் மகிழ்ச்சியில் நானும் திளைப்பேன். தமிழர்களின் உள்ளங்களில் இனிமை பொங்கட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT