தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கி புத்தாண்டைக் கொண்டாடிய சங்ககிரி இளைஞர்கள் 

1st Jan 2022 11:45 AM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஆங்கில புத்தாண்டையொட்டி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோர் 50 பேருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு போர்வை வழங்கினர். 

ஆங்கில புத்தாண்டையொட்டி சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் இளைஞர்கள், அதன் தலைவர் வெ.சத்யபிரகாஷ் தலைமையில் சங்ககிரி நகர், ஒருக்காமலை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோர் 50 பேருக்கு குளிர்காலத்திற்கு தேவையான போர்வைகளை வெள்ளிக்கிழமை இரவு வழங்கினர்.  

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார், சிவபாலா, ஹரிஹரன், நவீன், குரு உள்ளிட்ட பலர் இதில் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இளைஞர்களின் சேவையை பொதுமக்கள் பாராட்டினர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT