தமிழ்நாடு

நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்வு

1st Jan 2022 03:53 PM

ADVERTISEMENT

திருப்பூர்: பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது உற்பத்தியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் விலையானது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. அதிலும் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி நூல் விலையை தொடர்ந்து உயர்ந்து வந்தது பின்னலாடை உற்பத்தியாளர்களை வெகுவாகப் பாதித்தது.

அதிலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.50 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நூல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நூல் விலை, கிலோவுக்கு ரூ.10 குறைந்திருந்தது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி நூல் விலையை கிலோவுக்கு ரூ. 30 வரையில் உயர்த்தியுள்ளனர். இதனால் திருப்பூர் பின்னாலடை உற்பத்தி, ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள தொழில் துறையினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும், எடுத்த ஆர்டர்களுக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்யும்போது நஷ்டமடைய வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT