தமிழ்நாடு

புத்தாண்டு: தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

1st Jan 2022 04:54 PM

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொண்டர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். 
புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று காலை 11.30 மணியளவில் வருகை புரிந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர். 

இதையும் படிக்க- ஆங்கிலப் புத்தாண்டு: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

அதைத்தொடர்ந்து, தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கையசைத்தார். அத்துடன் தன்னிடம் வாழ்த்து பெற்ற தொண்டர்களுக்கு அன்பளிப்பாக ரூ.100 வழங்கினார். இந்நிகழ்வின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த், தொண்டர்களை சந்தித்தது அக்கட்சியினருக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT