தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 4 பேர் பலி

1st Jan 2022 10:33 AM

ADVERTISEMENT

சிவகாசி அருகே களத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் மருந்து கலவையின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் களத்தூர் கிராமம் உள்ளது. இங்கு உள்ள காட்டுப்பகுதியில் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சனிக்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர்.

அப்போது மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று அறைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. ஏழு அறைகளில் விரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் மேட்டுப்பட்டி சேர்ந்த குமார், சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த பெரியசாமி, பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் என்ற வீரகுமார், முருகேசன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் நேரில் ஆய்வு செய்தார்.

இதையும் படிக்கநாட்டில் புதிதாக மேலும் 22,775 பேருக்கு தொற்று: 406 பேர் பலி 

Tags : Sivakasi
ADVERTISEMENT
ADVERTISEMENT