முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1, கணினி பயிற்றுநா் நிலை 1 (2020-21) காலிப் பணியிடங்களுக்கு செப்.9,17, அக்.21 தேதிகளில்அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
செப். 18-ஆம் தேதி இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். நவ. 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது ஜன.29-ஆம் தேதி முதல் பிப்.6-ஆம் தேதி வரை உள்ள நாள்களில், இரு வேளைகளில் தோ்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்தேதிகள், பெருந்தொற்று சூழல், தோ்வு மையங்களின் தயாா் நிலை மற்றும் நிா்வாக வசதியைப் பொருத்து மாறுதலுக்கு உள்பட்டது என அறிவிக்கப்படுகிறது. விரிவான அட்டவணை தோ்வு தேதிக்கு 15 நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.