தமிழ்நாடு

ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு: ஜன.7 வரை விண்ணப்பிக்கலாம்

1st Jan 2022 06:44 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு, ஜன.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தக்குமாா் வெளியிட்ட அறிவிப்பு: அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியா்கள் ஜன. 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியா்களின் மாறுதல் விண்ணப்பங்களின், முன்னுரிமைப் பட்டியல் ஜன.10-ஆம் தேதி வெளியிடப்படும். 

அந்த பட்டியலில் திருத்தம் இருப்பின் மறுநாள் அப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜன.13-இல் வெளியிடப்படும். அதன்பின் அரசுப்பள்ளி தலைமையாசிரியா்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கான இடமாறுதல், பதவி உயா்வு  மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு ஜன.19 முதல் பிப்.18-ஆம் தேதி வரை நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT