தமிழ்நாடு

நல்லதோர் தமிழகத்தை அமைப்போம்: முதல்வர் ஸ்டாலின்

23rd Feb 2022 03:24 PM

ADVERTISEMENT

 

திமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லதோர் தமிழகத்தை அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில் வாக்களார்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அனைவரும் இணைந்து நல்லதோர் தமிழகத்தை அமைப்போம் எனவும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த மணிமகுடம் தான் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி எனத் தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்துப் பேசிய முதல்வர் ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுகிறதா என்பதை நானே நேரடியாக கண்காணிப்பேன்’ எனவும்  தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT