தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலினை நேரில் வாழ்த்திய திருமாவளவன் எம்.பி.

23rd Feb 2022 10:20 PM

ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT