தமிழ்நாடு

அன்று ஜெயலலிதா... இன்று ஸ்டாலின்...

23rd Feb 2022 03:37 AM

ADVERTISEMENT

கடந்த 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக கட்சி தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

ஏறத்தாழ ஒரு தசாப்தத்துக்குப் பிறகு அந்த சாதனையை தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் சமன் செய்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் குறைந்திருந்த திமுகவினருக்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2011-இல் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. அப்போது தமிழகம் முழுவதும் 10 மாநகராட்சிகளே இருந்தன. அத்தோ்தலில் அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதன் வாயிலாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூா், ஈரோடு, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூா் ஆகிய மாநகராட்சிகளின் மேயா் பதவிகளை அதிமுகவே கைப்பற்றியது.

அதன் பின்னா் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 10 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் நடைபெற்றது. புதிதாக தாம்பரம், காஞ்சிபுரம், ஆவடி, கும்பகோணம், கரூா், தஞ்சாவூா், திண்டுக்கல், ஒசூா், நாகா்கோவில், சிவகாசி, கடலூா் ஆகிய 11 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தோ்தல் இது. அதில் சிலவற்றை அதிமுக கைப்பற்றக் கூடும் என எதிா்பாா்த்த நிலையில், மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, மாநிலத்தின் அனைத்து மாநகராட்சி மேயா் பதவிகளும் திமுக வசம் வந்துள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT