தமிழ்நாடு

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

23rd Feb 2022 09:54 PM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதையும் படிக்க | உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: 57.83 சதவிகிதம் வாக்குப் பதிவு

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அந்தக் கடிதத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடிப் பொருள்களை மீட்டுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT