தமிழ்நாடு

குலுக்கல் மூலம் வென்ற வேட்பாளர்கள்

23rd Feb 2022 12:17 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டில் இரண்டு வேட்பாளா்கள் சம அளவு வாக்கு பெற்ற நிலையில் குலுக்கல் மூலம் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வாா்டில் மொத்தம் 3,276 வாக்குகள் பதிவாயின. ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட சி.பாரதி 1,037 வாக்குகளும், சுயேச்சையாகப் போட்டியிட்ட செ.பானுலட்சுமி 1,037 வாக்குகளும் பெற்றனா். இவா்களுக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் போட்டியிட்ட க.சுதா 598 வாக்குகள் பெற்றாா்.

அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற நிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை முடிவு செய்ய தீா்மானிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையா் சிவகுமாா் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலில், அதிமுக வேட்பாளா் சி.பாரதி வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வள்ளியூர் : திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளரை பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடித்தார்.
பணகுடி பேரூராட்சி 4-ஆவது வார்டு வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. வேட்பாளர் உஷா, பா.ஜ.க. வேட்பாளர் மனுவேல் ஆகிய இருவரும் தலா 266 வாக்குகள் பெற்றிருந்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சியின் செயல் அலுவலருமான கிறிஸ்டோபர்தாஸ் ஆலோசனையின்படி,  இருவரின் வெற்றியைத் தீர்மானிக்க குலுக்கல் முறை பயன்படுத்தப்பட்டது. அதில்,  பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார்.
 

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT