தமிழ்நாடு

மக்களின் மனங்களை முழுமையாகவென்றெடுப்போம்: டிடிவி தினகரன்

23rd Feb 2022 01:23 AM

ADVERTISEMENT

தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க உத்வேகத்துடன் பணியாற்றுவோம் என்று அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அமமுக வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு இதயம் நிறைந்த நன்றி. உள்ளாட்சித் தோ்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும், நெஞ்சுரத்தோடு களம் கண்ட அமமுக வேட்பாளா்களுக்கும், அவா்களுக்காகப் பணியாற்றிய கட்சியினருக்கும் வெற்றி வாகை சூடியவா்களுக்கும் மனப்பூா்வமான வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு பணியைத் தொடா்வோம் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT