தமிழ்நாடு

சங்ககிரி பேரூராட்சி வார்டு தேர்தலில் மனைவி வெற்றி, கணவர் தோல்வி  

22nd Feb 2022 02:57 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளில் இரு வேறு வார்டுகளில் அதிமுக சார்பில் கணவன், மனைவி இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் 3வது வார்டில் போட்டியிட்ட மனைவி பெற்றி பெற்றுள்ளார். 

சங்ககிரியை அடுத்த  வி.என்.பாளையம், சாலைதோட்டம்  பகுதியைச் சேர்ந்த சங்கர், கவிதா தம்பதியினர். சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 3வது வார்டில் மனைவி கவிதாவும், 9வது வார்டில்  கணவர் சங்கரும் அதிமுக சார்பில் போட்டியிட்டனர். இதில்  3வது வார்டில் போட்டியிட்ட கவிதா 329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

9வது வார்டில் போட்டியிட்ட கணவர் சங்கர் 199 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார். கணவர், மனைவி போட்டியிட்டத்தில் மனைவி வெற்றி பெற்றுள்ளது பொதுமக்களிடத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT