தமிழ்நாடு

புதுகையில் ஓரிடத்தைக் கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம்

22nd Feb 2022 04:29 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் ஒரு வார்டைக் கைப்பற்றியிருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மாநிலம் முழுவதும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறது.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், ஆலங்குடி பேரூராட்சியில் இரு இடங்களிலும், அன்னவாசல், கீரனூர் பேரூராட்சிகள் மற்றும் அறந்தாங்கி நகராட்சியில் தலா ஓர் இடத்திலும் போட்டியிட்டது.

அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவர் ஜா. முகமது பர்வேஸ், புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்டார். இந்த வார்டில் போட்டியிட்ட அதிமுக, திமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, பர்வேஸ் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இங்கு பர்வேஸ் பெற்ற வாக்குகள்-547. திமுக வேட்பாளர் ரா. ரமேஷ் பெற்ற வாக்குகள்- 205, அதிமுக வேட்பாளர் ரெ. கோமதிசங்கர் பெற்ற வாக்குகள்-203.

ADVERTISEMENT
ADVERTISEMENT