சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 12 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம்:
1வது வார்டு வி. தமிழ்செல்வி (அதிமுக), 2வது வார்டு கே.செல்வராஜ் (திமுக), 3வது வார்டு எம்.டி.சரவணன் (திமுக), 4வது வார்டு எஸ்.செல்வசூரியா (திமுக), 5 வது வார்டு ந.தேவன் (திமுக), 6வது வார்டு கே.மணியம்மாள் (திமுக), 7 வது வார்டு எ.ராணி (திமுக), 8 வது வார்டு டி.பிரேமகுமாரி (திமுக), 9 வது வார்டு மா.தீனதயாளன் (திமுக), 10 வது வார்டு வெ.புஷ்பவள்ளி (திமுக), 11 வது வார்டு எஸ். அசோக் (அதிமுக), 12 வது வார்டு பி.புவனேஸ்வரி (திமுக), 13 வது வார்டு இரா.மகாலட்சுமி (அதிமுக), 14 வது வார்டு ப.மணி (திமுக), 15 வது வார்டு ஜி.திருமுருகன் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக வெற்றி பெற்றுள்ளதால், எவ்வித இழுபறியும் போட்டியுமின்றி, அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.