தமிழ்நாடு

ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றியது அமமுக

22nd Feb 2022 12:38 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றி பேரூராட்சி தலைவர் பதவியைப் பிடித்தது.

மீதமுள்ள தலா 3 வார்டுகளில் திமுகவும், அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் வார்டு  8-இல் அமமுக தெற்கு மாவட்டச் செயலர் மா. சேகரும், வார்டு 11-இல் இவரது மனைவி திருமங்கை சேகரும் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT