தமிழ்நாடு

ஆவடி மாநகராட்சியில் வாக்கு எண்ணும் மையம் முன் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு 

22nd Feb 2022 12:47 PM

ADVERTISEMENT

ஆவடி மாநகராட்சியில் வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலையில் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஆவடி மாநராட்சியில் பதிவான வாக்குகள், இந்து கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சென்னை, திருவள்ளூர் சாலையில் பட்டாசுகள் வெடித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பட்டாசுகளை அப்புறப்படுத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT