தமிழ்நாடு

மதுரை மாநகராட்சியைக் கைப்பற்றியது திமுக அணி

22nd Feb 2022 09:32 PM

ADVERTISEMENT


மதுரை மாநகராட்சியிலுள்ள 100-இடங்களில் 80 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளன. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது.

இதையும் படிக்கசிறையில் வெற்றி வேட்பாளர்: வென்றும் கொண்டாட முடியாத நிலை!

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 இடங்களில் 80 இடங்களை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. மேலும் மதுரையில் 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மதுரையில் வார்ட் 63-இல் அதிமுக வேட்பாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தலா 1,394 வாக்குகள் பெற்றனர். இதனால், குலுக்கல் முறையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நடைமுறையை தேர்தல் அலுவலர்கள் கையாண்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT